என் மலர்

  கிரிக்கெட்

  2 வருடங்களுக்கு பிறகு களமிறங்கிய தமிழக வீரர்
  X

  முரளி விஜய்

  2 வருடங்களுக்கு பிறகு களமிறங்கிய தமிழக வீரர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நான் நம்பிக்கையுடனும் விளையாடுவதற்கு உடல் தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன்.
  • முரளி விஜய் 2019 டிசம்பரில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாட்டிற்காக விளையாடினார்.

  திருநெல்வேலியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்காக முரளி விஜய் விளையாடினார். இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு திண்டுக்கல் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் களமிறங்கிய அவர் 13 பந்துகளில் 8 ரன்னில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

  38 வயதான முரளி விஜய் முடிந்தவரை விளையாட விரும்புவதாகவும் சொந்த காரணங்களுக்காக ஓய்வு எடுத்ததாகவும் கூறினார்.

  இடைவெளிக்கு பிறகு விளையாடிய முரளி விஜய் கூறியதாவது:-

  எனக்கு ஒரு குடும்பம் உள்ளது. அவர்களைக் கவனித்துக் கொள்ள விரும்பினேன். நான் இப்போது எனது கிரிக்கெட்டை ரசிக்கிறேன். மேலும் நான் நம்பிக்கையுடனும் விளையாடுவதற்கு உடல் தகுதியுடனும் இருப்பதாக உணர்கிறேன். எனது அணிக்காகவும் டிஎன்பிஎல் போட்டிக்காகவும் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  முரளி விஜய் 2019 டிசம்பரில் ரஞ்சி டிராபியில் தமிழ்நாட்டிற்காக விளையாடினார். 2020-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த இரண்டு சீசன்களில், அவர் தனது மாநில அணிக்காக எந்த உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. மேலும் உள்ளூர் டிஎன்சிஏ லீக்கையும் அவர் புறக்கணித்தார்.

  Next Story
  ×