search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சந்தீப் வாரியர், சாய் கிஷோர் சாம்பியன் பந்து வீச்சாளர்கள்- கேப்டன் கவுசிக்காந்தி புகழாரம்
    X

    சந்தீப் வாரியர், சாய் கிஷோர் சாம்பியன் பந்து வீச்சாளர்கள்- கேப்டன் கவுசிக்காந்தி புகழாரம்

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் சாதனையுடன் 4-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
    • ஒரு ஓவர் வீசியிருந்தால் போட்டியின் முடிவு எங்கள் பக்கம் வந்து இருக்கும்.

    கோவை:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் கோவையில் நேற்று நடந்தது.

    இதில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

    பலத்த மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. சாய் சுதர்ஷன் 42 பந்தில் 65 ரன்னும் ( 8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஷாருக்கான் 17 பந்தில் 22 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சந்தீப் வாரியர், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், சோனு யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    17 ஓவர்களில் 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பின்னர் ஆடியது. 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்து இருந்த போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    மழை நீடித்ததால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. 5 ஓவர் நடந்து இருந்தால் டக்வொர்த்-லீவிஸ் விதி முறைப்படி முடிவு அறிவிக்கப்பட்டு இருக்கும்.

    அதற்கு வசதி இல்லாததால் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் கூட்டாக சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் சாதனையுடன் 4-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக்காந்தி கூறியதாவது:-

    உண்மையில் யாரும் எதிர் பார்க்காத முடிவு. ஆனாலும் கண்டிப்பாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்தீப் வாரியர், சாய் கிஷோர் ஆகியோர் எங்கள் அணியின் சாம்பியன் பந்து வீச்சாளர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை கிங்ஸ் அணி கேப்டன் ஷாருக்கான் கூறும் போது, 'முதன் முறையாக பட்டத்தை இணைந்து பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த முடிவு சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒரு ஓவர் வீசியிருந்தால் போட்டியின் முடிவு எங்கள் பக்கம் வந்து இருக்கும்.

    இருந்தாலும் இந்த வருடம் எங்கள் அணியின் ஆட்டம் குறிப்பிட்டு சொல்லும்படி இருந்தது' என்றார்.

    Next Story
    ×