என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 தரவரிசையில் முதல் இடத்தை தக்கவைத்த சூர்யகுமார் யாதவ்: டாப்-10 பட்டியலில் விராட் கோலி இல்லை
    X

    சூர்யகுமார் யாதவ்

    டி20 தரவரிசையில் முதல் இடத்தை தக்கவைத்த சூர்யகுமார் யாதவ்: டாப்-10 பட்டியலில் விராட் கோலி இல்லை

    • கடந்த வாரம் வெளியான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறினார் சூர்யகுமார்
    • பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 830 புள்ளிகளுடன் தற்போது 2-வது இடத்தில் உள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சர்வதேச டி௨௦ பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ்(869 புள்ளி) தற்போது அதை தக்கவைத்துள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 830 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் டெவோன் கான்வே 779 புள்ளிகளுடன் தனது மூன்றாம் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

    கடந்த வார நிலவரத்தின்படி டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தவிர இந்திய வீரர்களில் முதல் 10 இடங்களில் விராட் கோலி மட்டும் தான் இருந்தார்(10-வது இடம்). தற்போது அவர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். விராட் கோலி தற்போது 653 புள்ளிகளுடன் பட்டியலில்11-வது இடத்தில் உள்ளார்.

    Next Story
    ×