என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
அரையிறுதிக்கு முன்னேறுமா இங்கிலாந்து? 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
- அதிரடியாக விளையாடிய நிசங்கா 45 பந்தில் 67 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்
- இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா - குசல் மெண்டிஸ் களமிறங்கினர். பவர் பிளேயில் இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். மெண்டிஸ் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த தனஞ்ஜெயா 9 ரன்னிலும் அசலங்கா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய நிசங்கா 45 பந்தில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த சனகா 3, ராஜபக்சா 22, ஹசரங்கா 9, கருரத்ணே 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.