search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    3-வது டி20 போட்டி: நியூசிலாந்துக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
    X

    3-வது டி20 போட்டி: நியூசிலாந்துக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

    • பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது.
    • நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் - சைம் அயூப் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். சைம் அயூப் 32 ரன்களிலும் பாபர் அசாம் 37 ரன்களிலும் அவுட் ஆகினர்.

    இதனையடுத்து உஸ்மான் கான் 5 ரன்களுக்கும், முகமது ரிஸ்வான் 22 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க பாகிஸ்தான் அணி 104 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த இர்ஃபான் கான் - ஷதாப் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷதாப் கான் 41 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

    இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோதி 2 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி, மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

    Next Story
    ×