என் மலர்

  கிரிக்கெட்

  பிலிப்ஸ் அதிரடி சதம்- இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
  X

  பிலிப்ஸ் அதிரடி சதம்- இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் 64 பந்தில் 104 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
  • இலங்கை தரப்பில் ரஜிதா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் 1-ல் இடம் பெற்ற நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

  அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் 15 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனையடுத்து பிலிப்ஸ் - மிட்செல் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.

  அதிரடியாக விளையாடி பிலிப்ஸ் சதம் அடித்து அசத்தினார். 104 ரன்கள் எடுத்த அவர் குமாரா பந்து வீச்சில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது.

  இலங்கை தரப்பில் ரஜிதா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

  Next Story
  ×