என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்து பேட்டிங் தேர்வு
    X

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நெதர்லாந்து பேட்டிங் தேர்வு

    • 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது.
    • ஆப்கானிஸ்தான் 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது.

    லக்னோ:

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இன்று நடக்கும் 34-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    நெதர்லாந்து அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசத்துக்கு எதிராக), 4 தோல்வியுடன் (பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளிடம்) அரைஇறுதி வாய்ப்பில் லேசாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் இருக்கிறது.

    போட்டிக்கான ஆடும் லெவன்:-

    ஆப்கானிஸ்தான்:

    ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரஹமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ராம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் ரகுமான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி.

    நெதர்லாந்து:

    வெஸ்லி பரேசி, கேம்ஸ் ஓ டாவ்ட், காலின் அகேர்மான், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), பாஸ் டி லீட், சாகிப் சுல்பிகர், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தத், பால் வான் மீக்ரென்.

    Next Story
    ×