search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கடைசி வரை போட்டி சென்றதற்கு அர்ஷ்தீப் சிங் தான் காரணம்- ஷிகர் தவான்
    X

    கடைசி வரை போட்டி சென்றதற்கு அர்ஷ்தீப் சிங் தான் காரணம்- ஷிகர் தவான்

    • எங்களது அணியில் ஆஃப் ஸ்பின்னர்கள் என்று யாரும் இல்லை.
    • இந்த பிட்சில் பந்து நன்றாக திரும்பியது. அங்கு தான் எங்களது பேட்டிங்கும் பிரச்சனையாகி அமைந்துவிட்டது.

    ஐபிஎல் தொடரில் 53-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் ஆடியது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலமாக 2-வது முறையாக அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார் ரிங்கு சிங். இதற்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்துக் கொடுத்து அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

    அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு வழியாக இந்த வெற்றியின் மூலமாக 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறியிருப்பதாவது:-

    இந்த பிட்சில் பேட்டிங் ஆடுவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. 179 ரன்கள் எடுத்த எங்களால் வெற்றி பெற முடியவில்லை. கொல்கத்தா வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். கடைசி வரை போட்டி சென்றதற்கு அர்ஷ்தீப் சிங் தான் காரணம்.

    எங்களது அணியில் ஆஃப் ஸ்பின்னர்கள் என்று யாரும் இல்லை. ஆதலால் இடது கை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் ஆடி அதிக ரன்கள் எடுத்துவிடுகிறார்கள். அவர்களது விக்கெட்டை கைப்பற்ற நாங்கள் திணறி வருகிறோம்.

    இந்த பிட்சில் பந்து நன்றாக திரும்பியது. அங்கு தான் எங்களது பேட்டிங்கும் பிரச்சனையாகி அமைந்துவிட்டது. இதனால் குறைவான ரன்கள் எடுத்து தோற்றுவிட்டோம்.

    இவ்வாறு தவான் கூறினார்.

    Next Story
    ×