search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட ஜேசன் ராய்- காரணம் இதுதான்
    X

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட ஜேசன் ராய்- காரணம் இதுதான்

    • நான் எப்போதும் இங்கிலாந்து அணியை விட்டு விலக மாட்டேன்.
    • நாட்டுக்காக விளையாடுவது என்றும் தனக்கு பெருமையான காரியம் என்றும் தெரிவித்துள்ளது.

    ஐபிஎல் போன்ற டி20 போட்டிகள் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் பணமும் கிடைப்பதால், பெரும்பாலான வீரர்கள் தாய்நாட்டைப் புறக்கணித்து ஐபிஎல் போன்ற டி20 தொடருக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்.

    மேலும் ஐபிஎல் போலவே அதில் அணிகளை வாங்கிய உரிமையாளர் தென்னாபிரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளில் தங்களுடைய கிளை அணைகளை வாங்கியுள்ளனர்.

    அந்த வரிசையில் கிரிக்கெட் மிகவும் பிரபலம் இல்லாத அமெரிக்காவில் புதிதாக மேஜர் லீக் டி20 தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற ஐபிஎல் அணிகள் தங்களுடைய கிளைகளை வாங்கியுள்ளன.

    அமெரிக்க்காவில் கொல்கத்தா நிர்வகிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக பிரபல இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் 2 வருடங்கள் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    லாஸ் ஏஞ்செல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக இரண்டு ஆண்டு விளையாடுவதற்காக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்க்கு 300,000 பவுண்ட் ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவின் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடுவதற்காக ஜேசன் ராய் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான ஒப்பந்தத்தை அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளார்.

    இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் தற்போது உறுதி செய்துள்ளது.

    இதற்கிடையில் தனது முடிவு குறித்து பேசியுள்ள ஜேசன் ராய், நான் எப்போதும் இங்கிலாந்து அணியை விட்டு விலக மாட்டேன். நாட்டுக்காக விளையாடுவது என்றும் தனக்கு பெருமையான காரியம் என்றும் தெரிவித்துள்ளது.

    ஜேசன் ராய் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 64 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 5980 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

    Next Story
    ×