search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    எங்களது பலம் என்ன என்பதை அறிந்து செயல்பட்டோம்- வெற்றி குறித்து டேவிட் வார்னர் கருத்து
    X

    எங்களது பலம் என்ன என்பதை அறிந்து செயல்பட்டோம்- வெற்றி குறித்து டேவிட் வார்னர் கருத்து

    • டெல்லி ஆடுகளம் போல் அல்லாமல், இந்த பிட்ச் சிறப்பாக இருந்தது.
    • பேட்டிங்கில் பிரித்வி ஷா கொடுத்த இம்பேக்ட் பார்ப்பதற்கே சிறப்பாக அமைந்தது.

    ஐபிஎல் தொடரின் மிகமுக்கியமான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. இந்தப் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு பவர்பிளே ஓவர்களில் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா - டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக செயல்பட்டதே முக்கிய காரணமாக அமைந்தது.

    குறிப்பாக டெல்லி அணியின் பிரித்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களை விளாசி அசத்தினார். இது நடப்பு ஐபிஎல் சீசனில் பிரித்வி ஷா விளாசியுள்ள முதல் அரைசதமாகும். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரித்வி ஷாவிற்கு மிகச்சிறந்த சீசனாக அமையும் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறி இருந்தார். ஆனால் அதற்கு மாறாக பிரித்வி ஷா சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

    ஒரு கட்டத்தில் பிரித்வி ஷாவை டெல்லி அணி இருந்து பிளேயிங் லெவனில் இருந்தே நீக்கியது. ஆனால் மனம்தளராத பிரித்வி ஷா, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி கம்பேக் கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

    களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் என்றே நினைக்கிறேன். ஆனால் இந்தப் போட்டியில் எங்களது பலம் என்ன என்பதை அறிந்து செயல்பட்டோம்.

    அதேபோல் டெல்லி ஆடுகளம் போல் அல்லாமல், இந்த பிட்ச் சிறப்பாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கில் பிரித்வி ஷா கொடுத்த இம்பேக்ட் பார்ப்பதற்கே சிறப்பாக அமைந்தது. ரைலி ரூஸோவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். டெல்லி பிட்ச்சில் சிறந்த பேட்டிங்கை செய்ய தவறியுள்ளோம். ஆனால் இன்றையப் போட்டியில் வென்று 2 புள்ளிகளை பெற்று மகிழ்ச்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×