search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கொல்கத்தாவுக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!
    X

    கொல்கத்தாவுக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

    • விக்கெட்கள் சரிந்த நிலையிலும், ஷிவம் தூபே 34 பந்துகளில் 48 ரன்களை குவித்தார்.
    • வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன் முறையே 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இரண்டாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

    முதலில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே முறையே 17 மற்றும் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அஜிங்கியா ரஹானே 16 ரன்களுக்கு அவுட் ஆனார். பின் களமிறங்கிய அம்பதி ராயுடு 4 ரன்களுக்கு விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபே ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி வந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா 20 ரன்களுக்கு கடைசி ஓவரில் அவுட் ஆனார்.

    ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்த நிலையிலும், ஷிவம் தூபே 34 பந்துகளில் 48 ரன்களை குவித்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்களை இழுந்து 144 ரன்களை எடுத்தது. கொல்கத்தா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன் முறையே 2 விக்கெட்களை கைப்பற்றினர். வைபவ் அரோரா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×