search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பெண்கள் ஆசிய கோப்பை- தாய்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
    X

    பெண்கள் ஆசிய கோப்பை- தாய்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு

    • இந்த போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக மந்தனா செயல்படுகிறார்.
    • இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய இந்தியா 4 போட்டிகளில் வெற்றியும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய இந்தியா 4 போட்டிகளில் வெற்றியும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.

    இந்நிலையில் 6-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் களமிறங்கும் இந்தியா இன்று தாய்லாந்துடன் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் இந்திய அணியின் கேப்டனாக மந்தனா செயல்படுகிறார்.

    இந்திய அணி:-

    ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, சபினேனி மேகனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ்(வ), கிரண் நவ்கிரே, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, மேக்னா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்

    தாய்லாந்து அணி:-

    நன்னபட் கொஞ்சரோஎங்கை, நட்டகன் சந்தம், நருயெமோல் சாய்வாய், சொர்ணரின் டிப்போச், சனிடா சுத்திருவாங், ரோசனன் கானோ, பன்னிதா மாயா, நாட்டாயா பூச்சதம், ஒன்னிச்சா கம்சோம்பு, திபாட்சா புத்தாவோங், நந்திதா போன்ஸ்

    Next Story
    ×