search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கோவையில் முதல்முறையாக டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி
    X

    கோவையில் முதல்முறையாக டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி

    • டி.என்.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் எவ்வித போட்டிகளும் நடத்தப்படவில்லை.
    • முதல் போட்டி 23-ந் தேதி நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் (டி.என்.பி.எல்.) போட்டிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 6-வது சீசன் போட்டிகள் வருகிற 23-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி வரை நடக்கிறது.

    போட்டிகள் அனைத்தும் நெல்லை, திண்டுக்கல், கோவை மற்றும் சேலம் ஆகிய மாநகரங்களில் நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

    இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி, டி.என்.பி.எல். சேர்மன் சிவகுமார், கிரிக்கெட் சங்க மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணசுவாமி ஆகியோர் கோவையில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

    முதல் போட்டி 23-ந் தேதி நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டி.என்.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் எவ்வித போட்டிகளும் நடத்தப்படவில்லை.

    கோவையில் டி.என்.பி.எல். போட்டிகளை நடத்த கடந்த 2018-ம் ஆண்டு முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கோவையில் போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது முதல்முறையாக கோவையில் நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் லீக் போட்டிகள் நடக்கின்றன. இதுதவிர 2 தகுதி சுற்று போட்டிகள் நடக்கிறது.

    இந்த தொடரின் இறுதிப் போட்டி கோவையில் அடுத்த மாதம் 31-ந் தேதி நடக்கிறது.

    கோவையில் அடுத்த மாதம் 10-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன.

    12-ந் தேதி நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 16-ந் தேதி நடக்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணியும் மோதுகின்றன.

    கோவையில் நடைபெறும் போட்டியை 5 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. போட்டியை காண டிக்கெட் கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டி.என்.பி.எல். போட்டியில் விளையாடிய வீரர்களில் 14 பேர் ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொண்டு விளையாடி உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது சி.இ.ஓ. பிரசன்னா கண்ணன், இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன், லைக்கா கோவை அணியின் நிர்வாகி ஹரி மனோகர், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ரிசிகேஸ் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகி மான்பாப்னா, கிரிக்கெட் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம் கவுதமன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×