search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை வெல்ல இந்திய அணிக்கு 69 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
    X

    ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை வெல்ல இந்திய அணிக்கு 69 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    • டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
    • இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் 19 ரன்கள் எடுத்தார்.

    போட்செப்ஸ்ட்ரூம்:

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் 19 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் எடுத்தது.

    இந்திய அணி தரப்பில் டைட்டாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

    Next Story
    ×