search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    துபே- ஜெய்ஸ்வால் அதிரடி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
    X

    துபே- ஜெய்ஸ்வால் அதிரடி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ரோகித் தனது 150 டி20 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி குல்படின் நைப்-ன் அதிரடி அரை சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - ஜெய்வால் களமிறங்கினர். ரோகித் தனது 150 டி20 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவர் முதல் போட்டியிலும் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜெய்ஸ்வால் - விராட் கோலி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். விராட் கோலி 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய துபே ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினார். அதிரடியாக விளையாடி 2 பேரும் அரை சதம் அடித்தனர். ஜெய்ஸ்வால் 68 ரன்னிலும் ஜித்தேஷ் சர்மா 0 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில் இந்திய அணி 15.4 ஓவரில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. துபே 63 ரன்னிலும் ரிங்கு சிங் 9 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    Next Story
    ×