என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
2025 சாம்பியன்ஸ் டிராபி: டேவிட் வார்னருக்கு வாய்ப்பில்லை: ஜார்ஜ் பெய்லி அதிரடி
- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வார்னர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
- ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
டேவிட் வார்னர் 3 வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருடன் டெஸ்ட்டிலும், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையுடன் டி20 கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இப்படி அறிவித்ததையடுத்து அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட டேவிட் வார்னர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் டேவிட் வார்னருக்கு பதிலாக அறிமுக வீர்ர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இடம் பெற்றுள்ளார்.
அவர் டி20 அணி மட்டுமின்றி, ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த டேவிட் வார்னருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்காக தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தது.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பிடிக்க மாட்டார் என அந்த அணியின் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, "எங்கள் புரிதல் என்னவென்றால், டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பிடிக்க மாட்டார் என்பதை அந்த அணியின் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.