search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நம்பிக்கை அளித்த மொசாடெக்... ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்
    X

    மொசாடெக் உசைன்

    நம்பிக்கை அளித்த மொசாடெக்... ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

    • மொசாடெக் உசைன் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளிக்க, அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜிப்பூர் ரஹ்மான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    சார்ஜா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஆப்கானிஸ்தானின் அதிரடி பந்துவீச்சில், வங்காளதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர். 53 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய வங்காளதேச அணி அதன்பின்னர் சற்று நிதானமாக ஆடியது. ஆறுதல் அளித்த மஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    முஜிப்பூர் ரஹ்மான்

    மறுமுனையில் மொசாடெக் உசைன் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளிக்க, அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. தொடர்ந்து ஆடிய மொசாடெக், 30 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜிப்பூர் ரஹ்மான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

    Next Story
    ×