என் மலர்
சினிமா

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
16-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வருகிற 13-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. #CIFF #ChennaiInternationalFilmFestival
16-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வருகிற 13-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
இதன் தொடக்க விழா கலைவாணர் அரங்கத்தில் வருகிற 13-ந்தேதி மாலை 6:15 மணிக்கு நடைபெறுகிறது. இதன் நிறைவு விழா டிசம்பர் 20-ந்தேதி மாலை 6:15 மணிக்கு கலைவாணர் அரங்கம் அல்லது தேவி தியேட்டரில் நடைபெறும் என்று விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விழாவில் 59 நாடுகளில் இருந்து 159 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. சிறப்பு பிரதிநிதிகளாக ரசூல் பூக்குட்டி (சவுண்ட் டிசைனர்), இயக்குநர் ஷில்பா (சிங்கப்பூர்), இயக்குநர் அபு ஷேஹெட் எமோன் (வங்காள தேசம்), இயக்குநர் நைனா சென் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் திரைப்படமாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி’ஆர் விருது வென்ற, ஷாப் லிப்டர்ஸ் (ஜப்பான்) திரைப்படம் திரையிடப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் 96, அபியும் அனுவும், அண்ணனுக்கு ஜே, ஜீனியஸ், இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை, கடைக்குட்டி சிங்கம், மெர்குரி, பரியேறும் பெருமாள், ராட்சசன், வடசென்னை, வேலைக்காரன் உள்ளிட்ட 12 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. சிறப்புத் திரையிடலாக ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ திரையிடப்படுகிறது. #CIFF #ChennaiInternationalFilmFestival
Next Story