என் மலர்tooltip icon

    சினிமா

    திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி
    X

    திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

    அதிமுக கட்சியில் நீண்ட காலமாக இருந்து வந்த நடிகர் ராதாரவி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    சென்னை:

    நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி, ஒருகாலத்தில் திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் நீண்ட காலமாக இருந்து வந்தார். 2002-2006 காலகட்டத்தில் சைதாப்பேட்டை அதிமுக சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தார்.

    ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்துள்ளதால் திமுகவுக்கு செல்ல உள்ளதாக சமீபத்தில் நடந்த வாகை சந்திரசேகர் மகள் திருமணத்தில் கலந்து கொண்டபோது ராதாரவி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னையில் செயல் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ராதாரவி இன்று திமுகவில் இணைந்துள்ளார்.



    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    திமுகவில் சேர்ந்ததில் மகிழ்ச்சி. நீண்ட காலமாகவே இது குறித்து நான் எனது கருத்தினை தெரிவித்து வந்தேன். வாகை சந்திர சேகரிடமும் இதுகுறித்து கலந்து ஆலோசித்து வந்தேன். என்னுடைய தாயின் துக்கத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக இருந்தார். தாயின் நினைவு நாளில் திமுகவில் சேர்ந்துள்ளேன். என்னுடைய தாய் கழகத்தில் மீண்டும் வந்துவிட்டேன்.

    நாளை தங்கச் சாலையில் நடைபெறும் திமுக கூட்டத்தில் எனது கருத்தினை விரிவாக பேச உள்ளேன். தற்போது எதிர்கட்சியாக இருக்கும் திமுக வருங்காலத்தில் ஆளும் கட்சியாக மாறும். எதிர்காலத்தில் திமுக மட்டும் தான் இருக்கும். தமிழகத்தில் தகுதியுள்ள தலைவர் யாரும் இல்லை, தளபதியால் மட்டுமே நல்ல தலைவராக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்
    Next Story
    ×