என் மலர்tooltip icon

    சினிமா

    தொகுதிக்குள் வந்த நடிகர் கருணாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம்
    X

    தொகுதிக்குள் வந்த நடிகர் கருணாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம்

    தான் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருவாடானை தொகுதிக்குள் வந்த நடிகர் கருணாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா பேரவையினர் கோ‌ஷம் எழுப்பினர். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.


    கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நடிகர் கருணாஸ் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொகுதி மக்கள் பலரும், ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவு தருமாறு வலியுறுத்தினர். அவர் காணவில்லை என போலீசிலும் புகார் செய்யப்பட்டது.


    இந்நிலையில் நடிகர் கருணாஸ் இன்று காலை திருவாடானை தொகுதிக்கு வந்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் திருவாடானைக்கு சென்றார். அங்குள்ள பஸ் நிலையம் பகுதிக்கு சென்றுபோது அங்கு திரண்டிருந்த தீபா பேரவையினர் திடீரென்று கருணாஸ் ஓழிக என்று கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உடனே திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார், தீபா பேரவையினரிடம் பேசினர். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×