என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முன்னோட்டம்
X
ரீ
Byமாலை மலர்7 April 2022 12:05 PM GMT (Updated: 7 April 2022 12:05 PM GMT)
ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுந்தரவடிவேல் கதை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் ரீ படத்தின் முன்னோட்டம்.
முற்றிலும் வணிக மயமாகிப் போய்விட்ட இந்த வாழ்க்கைச் சூழலில் தொழில்நுட்பம் உலகத்தை உள்ளங்கைக்குள் இணைக்கிறது. உலகத் தொடர்புகள் மிக விரைவில் சாத்தியமாகிறது. ஆனால் அருகிலிருக்கும் வீடுகளில் இருப்பவர் யார்? அங்கு என்ன நடக்கிறது என்று தெரிவதில்லை.
ஆனால் 'ரீ' படத்தின் கதாநாயகி அப்படி இருப்பவள் அல்ல. அவளது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு சத்தம் வருகிறது. அது அவளை அலைக்கழிக்கிறது. அவளைச் சமநிலை இழக்கச் செய்கிறது.
என்ன சத்தம் இந்த நேரம்? பேயின் ஒலியா? மனிதனின் வலியா? என்று அறிய முற்படுகிறாள். ஆனால் பக்கத்து வீட்டில் ஒரு நாகரிகமான டாக்டர் குடும்பம் தான் வசிக்கிறது. இந்நிலையில் எங்கிருந்து சத்தம் வருகிறது அதன் பின்னணி என்ன என்று ஆராய முற்படும் போது பல மர்மங்கள் விரிகின்றன. எதிர்பாராத திசையில் சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? அவற்றைப் பற்றிப் பேசும் படம் தான் ''ரீ'.
இப்படத்தை சுந்தரவடிவேல் எழுதி இயக்கியுள்ளார். அவரே தனது ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இது கதாநாயகியை மையப்படுத்திய கதை கொண்ட படம். இப்படத்தில் 'ஹர மகாதேவி' படத்தில் நடித்த காயத்ரி ரமா நாயகியாக நடித்துள்ளார். பாலச்சந்தரின் ஆஸ்தான எழுத்தாளர் அனந்துவின் தங்கையின் பேரன் பிரசாந்த் ஸ்ரீனிவாசன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் பிரசாத், சங்கீதா பால், மணி சங்கர், சுரேஷ் பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கு ஒளிப்பதிவு தினேஷ் ஸ்ரீநிவாஸ், பின்னணி இசை ஸ்பர்ஜன் பால், பாடல் இசை ஹரிஜி, எடிட்டிங் கே.ஸ்ரீனிவாஸ்.
Next Story
×