என் மலர்
முன்னோட்டம்

குதிரைவால் பட போஸ்டர்
குதிரைவால்
மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்கத்தில் கலையரசன் நடித்துள்ள ‘குதிரைவால்’ படத்தின் முன்னோட்டம்.
நீலம் புரடொக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஜி.ராஜேஷ் அமைத்திருக்கிறார். பிரதீப் குமார் மற்றும் மார்டின் விசர் இசையமைத்திருக்கிறார்கள்.
உளவியல், ஆள்மன கற்பனைகள் மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு, மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாகவும், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கி உள்ளனர்.
Next Story