என் மலர்

    முன்னோட்டம்

    அழகிய கண்ணே படத்தின் முன்னோட்டம்
    X
    அழகிய கண்ணே படத்தின் முன்னோட்டம்

    அழகிய கண்ணே

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் "அழகிய கண்ணே" திரைப்படத்தின் முன்னோட்டம்.
    தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். இதில் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

    பல திருப்பங்கள் கொண்ட ஒரு இளைஞனின் காதல் கதையை மையமாக கொண்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, இயக்குநர் ராஜ்கபூர், காதல் சுகுமார், விஜய் டிவி ஆன்டிருவ்ஸ், அமுதவானன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

    கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதும் இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஏ,ஆர்,அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
    Next Story
    ×