என் மலர்tooltip icon

    சினிமா

    மீண்டும் ஒரு காதல் கதை
    X

    மீண்டும் ஒரு காதல் கதை

    மலையாள திரையுலகில் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இது தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
    மலையாள திரையுலகில் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இது தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

    அறிமுக நாயகன் வால்டர் பிலிப்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் நடித்த ‘இஷா தல்வார்’ இதிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாடலாசிரியர் அருண் காமராஜ் எழுதிய “மைபோட்டு மைபோட்டு” எனும் பாடல் வெளியாகி உள்ளது. இது திருமணச்சடங்கின் போது பாடப்படுவதாக அமைந்திருக்கிறது. இப்பாடலில் நிறைய பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ஆடுகளம் படத்தின்
    ‘ஒத்த சொல்லால’ பாடல் புகழ், வேல்முருகனும் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார். இது அவரது முதல் மெலோடிப் பாடல். இந்த பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். இது பற்றி கூறிய அவர்...

    படத்தின் நாயகன் வால்டர், தனது சகோதரியின் நடனப்பள்ளியில் படித்து வரும் போதிலிருந்தே தனக்கு தெரியும். கேரளாவில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல் மிக அருமையாக வந்திருக்கிறது என்றார்.

    எஸ்.வி.டி. ஜெயச்சந்திரன் இந்த படத்தை வழங்குகிறார். இயக்கம்-ஆர்.ஜவகர். கலைப்புலி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தினை உலகமெங்கும் வெளியிடுகின்றது.
    Next Story
    ×