என் மலர்tooltip icon

    சினிமா

    எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
    X

    எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

    ஜெயராம் புரொடக்ஷன்ஸ் வழங்கு படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்தில் கவுண்டமணி நாயகனாக நடிக்கிறார்.
    ஜெயராம் புரொடக்ஷன்ஸ் வழங்கு படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இந்த படத்தில் கவுண்டமணி நாயகனாக நடிக்கிறார். கேரவன் கிருஷ்ணன் எனும் கதாபாத்திரத்தில் நாத்திகவாதியாக தோன்றுகிறார் கவுண்டமணி.

    அரசியல் வாதிகளையும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தனக்கே உரிய பாணியில் சாடுகிறார். அவருடன் சனா, சவுந்தரராஜா, ரித்விகா, ராம்ஸ், சதுரங்கவேட்டை வளவன், மூணார் ரமேஷ், வாசகர், வீரசமர், ஒளிப்பதிவாளர், டி.கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பின்னணி பாடகர் வேல்முருகன் முதல் முறையாக கவுண்டமணியுடன் இணைந்து நடிக்கிறார்.

    டி.கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இசை- எஸ்.என். அருணகிரி . சமூக வலைத்தளங்கள் உதவியுடன் காதலுக்கு உதவி செய்பவராக, அதே சமயம் சினிமாவிற்கு கேரவனை வாடகைக்கு தரும் தொழில் அதிபர் வேடத்தில் கவுண்டமணி வருகிறார். அவருக்கு மனைவியாக தெலுங்கு நடிகை சனா நடிக்கிறார்.

    கோடம்பாக்கம் மறுபேரு கோலிவுட்டுடா என தொடங்கும் பாடலை கவுண்டமணிக்காக தேவா பாடியுள்ளார். காதலுக்காக அரசியல் வாதிகளுடன் கவுண்டமணி மோதும் சண்டைக் காட்சியை சண்டைப்பயிற்சியாளர் திலீப்சுப்பராயன் அமைத்துள்ளார்.
    படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை ஏப்ரல் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×