என் மலர்
OTT

இந்த வார ஓ.டி.டி.யில் என்ன பாக்கலாம்?
- அமரன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது
- பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜ் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான படம் 'மட்கா'.
திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
'அமரன்'
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த 5-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
அமரன் திரைப்படத்தின் விமர்சனத்தை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
'மேரி'
மேரி என்பது டி.ஜே. கருசோ இயக்கியிருக்கும் பைபிள் அடிப்படையிலான திரைப்படமாகும். இதில் நோவா கோஹன், இடோ டகோ மற்றும் அந்தோனி ஹாப்கின்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 4-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்டார் வார்ஸ்: ஸ்கெலிட்டன் க்ரூ'
கிறிஸ்டோபர் போர்டின் மற்றும் ஜான் வாட்ஸால் உருவாக்கப்பட்டது இந்த தொடர். இது இரண்டு எபிசோடுகளாக வெளியாக உள்ளது. வேறொரு கிரகத்தில் சிக்கி தவிக்கும் குழந்தைகள், தங்கள் சொந்த கிரகத்திற்கு திரும்பி செல்ல முயற்சிக்கும் போது மறக்க முடியாத விண்மீன் சாகசத்தில் ஈடுபடுவதை இந்த தொடர் காட்டுகிறது. இந்த தொடர் கடந்த 2-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'மட்கா'
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜ் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான படம் 'மட்கா'. இந்த படத்தினை கருணா குமார் இயக்கியுள்ளார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள் இப்படம் கடந்த 5 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'சார்'
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சார்'. சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் கல்வி அனைவருக்கும் சமம் என்பதை கூறும் விதமாக உருவாகியுள்ளது. இப்படம் நேற்று (6-ந் தேதி) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
சார் திரைப்படத்தின் விமர்சனத்தை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
'ஜிக்ரா'
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்துள்ள படம் 'ஜிக்ரா'. தர்மா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தினை வாசன் பாலா இயக்கியுள்ளார். தி ஆர்ச்சீஸ் நடிகர் வேதாங் ரெய்னா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது
'லிட்டில் ஹார்ட்ஸ்'
அபி டிரீசா பால் மற்றும் ஆன்டோ ஜோஸ் பெரேரா ஆகியோரால் நகைச்சுவை கதைக்களத்தில் இயக்கப்பட்ட மலையாள படம் 'லிட்டில் ஹார்ட்ஸ்'. சாண்ட்ரா தாமஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஷேன் நிகம் மற்றும் மஹிமா நம்பியார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மூன்று வெவ்வேறு ஜோடிகளின் காதல் கதை பற்றி கூறும் இப்படம் க் டென்ட் கொட்டாய் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






