என் மலர்
OTT

This Week OTT Release... மிடில் கிளாஸ் முதல் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வரை... ஓர் பார்வை
- கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் 'ரிவால்வர் ரீட்டா'.
- கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
மிடில் கிளாஸ்
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான படம் 'மிடில் கிளாஸ்'. திருமணமான குடும்பத் தலைவன் என்னென்ன சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவையில் சொல்லப்பட்டு உள்ளது. இப்படம் நாளை முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டுகளிக்கலாம்.
ரஜினி கேங்
'பிஸ்தா' திரைப்படம், 'உப்பு புளி காரம்', 'கனா காணும் காலங்கள்' போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம், 'ரஜினி கேங்'. ரஜினி கிஷன் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திவிகா நடித்துள்ளார். மேலும், முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்த இப்படம் நாளை முதல் ப்ரைம் வீடியோ மற்றும் சிம்பிளி சௌத் ஓ.டி.டி. தளங்களில் கண்டு களிக்கலாம்.
ஆந்திரா கிங் தாலூகா
ராம் பொதினேனி, பாக்யஸ்ரீ போர்ஸ், யுபேந்திரா ஆகியோர் நடிப்பில் வெளியான தெலுங்கு சினிமா. 2002-ல் நடக்கும் கதை. கல்லூரி மாணவரான நாயகன், தெலுங்கு சினிமா நட்சத்திரமான சூர்யாவின் ரசிகர் என்ற மனநிலையை தாண்டி அவரை மானசீக குருவாக ஏற்கிறார். இந்தநிலையில் சூர்யாவின் 9 படங்கள் தொடர்ந்து தோல்வியடைகிறது. இதனால் அவருடைய செல்வாக்கு சரியதொடங்கி 10-வது படத்தை தயாரிக்க படத்தயாரிப்பாளர்கள் இல்லாதநிலை ஏற்படுகிறது. அப்போது நாயகன் தன்னுடைய நட்சத்திரத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட கூடாது என்றநோக்கில் மேற்கொள்ளும் முடிவே இதன் கதை. நெட்பிளிக்சில் வருகிற 25-ந்தேதி வெளியாகிற இதனை தமிழில் காணலாம்.
ரிவால்வர் ரீட்டா
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் 'ரிவால்வர் ரீட்டா'. இப்படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' வருகிற 26-ந்தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் கண்டு களிக்கலாம்.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 பாகம் 2
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 முழு சீசன்கள் வெளியாகி உள்ளன. கடந்த நவம்பர் மாதம் டான் டிராட்சன்பெர்க் இயக்கிய 5-வது சீசனின் முதல் 4 எபிசோட்டுகள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி முதல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் கண்டு மகிழலாம்.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.






