என் மலர்
கிசுகிசு

கிசுகிசு
எதிர்பார்த்து ஏமாந்துப் போன நடிகை
சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் அறிமுகமான நடிகை, படக்குழுவினரை நம்பி ஏமாந்து விட்டாராம்.
தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வந்த நடிகை, தமிழில் சங்க தலைவர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். இந்த படம் சூப்பர் ஹிட்டாகும் என்றும் தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்றும் மிகவும் நம்பி இருந்தாராம். ஆனால், நடிகை எதிர்பார்த்த படி அந்த படம் ஓடவில்லையாம். நல்ல பெயரும் நடிகைக்கு கிடைக்கவில்லையாம்.
இதனால் ஏமாந்து போன நடிகை, படக்குழுவினர் தன்னை ஏமாற்றி விட்டதாக பலரிடம் புலம்பி வருகிறாராம். இனிமேல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடிக்க இருக்கிறாராம் நடிகை.
Next Story






