என் மலர்
கிசுகிசு

கிசுகிசு
நடிகைகளை பார்த்து மனதை மாற்றிய நடிகை
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, மற்ற நடிகைகளை பார்த்து தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளாராம்.
தமிழில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக இருப்பவர் படத்தில் அறிமுகமான நடிகை, தொடர்ந்து குடும்ப பாங்கான தோற்றத்தில் நடித்து வந்தாராம். நடிகைக்கும் தொடர்ந்து ஓரிரு பட வாய்ப்புகள் கிடைத்ததாம்.
தற்போது சமூக வலைத்தளத்தில் மற்ற நடிகைகள் பலரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால், நடிகையும், அவர்களைப் போல் கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தி வெளியிட்டு இருக்கிறாராம். இதைப்பார்த்த நெட்டிசன்கள், நடிகைக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி மாறிட்டாங்க... நல்லாதானே இருந்தாங்க... என்று கிண்டல் செய்து வருகிறார்களாம்.
Next Story






