search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    ஓவர் கெத்து காட்டும் இயக்குனர்

    இரண்டு பட வெற்றிகளை கொடுத்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் ஓவர் கெத்து காண்பித்து வருகிறாராம்.
    இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் ஒருவர் தற்போது முன்னணி நடிகரை வைத்து படம் இயக்கி வருகிறாராம். சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செலவான காரணத்தால் படத்தை தயாரிக்கும் நிறுவனம், இயக்குனர் மீது தற்போது கடும் கோபத்தில் இருக்கிறதாம். இது தவிர படப்பிடிப்பு தளத்திலும் அவர் ஓவர் கெத்து காட்டி வருகிறாராம்.

    மேலும் அவர் படத்தின் படப்பிடிப்புக்கு மிகவும் தாமதமாகத்தான் வருகிறாராம். இவருக்கு முன்னரே ஷூட்டிங்கிற்கு வந்துவிடும் நடிகர் இயக்குனருக்காக அதிக நேரம் காத்திருக்கிறாராம். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் மீது அனைவரும் கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

    இரண்டு படம் வெற்றி பெற்றதற்கே இவ்வளவு ஆட்டமா என்று இயக்குனர் பற்றி கோடம்பாக்கத்தில் பலரும் கிசுகிசுத்து வருகிறார்களாம்.
    Next Story
    ×