என் மலர்
கிசுகிசு

கிசுகிசு
விட்ட வாய்ப்பை பிடிக்க போராடும் நடிகை
முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை, தான் இழந்த பட வாய்ப்பை பிடிக்க போராடி வருகிறாராம்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டாராம். அதன்பின் ஓய்வு எடுத்ததில் உடல் எடை கூடி குண்டாக மாறினாராம். இதனால் பட வாய்ப்புகளை இழந்தாராம். இழந்த பட வாய்ப்புகளை பிடிக்க உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினாராம்.
அந்த முயற்சி ஓரளவிற்கு கைக்கொடுத்தாலும், பட வாய்ப்புகளை பிடிக்க முடியவில்லையாம். இழந்த பட வாய்ப்புகளை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தூது அனுப்ப முடிவு செய்திருக்கிறாராம் நடிகை.
Next Story






