என் மலர்
கிசுகிசு

கிசுகிசு
கெட்ட பெயரை நீக்க போராடும் நடிகர்
இளம் நடிகர் ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை நீக்க மிகவும் போராடி வருகிறாராம்.
சின்னத்திரையில் இருந்து தற்போது பெரியத்திரைக்கு வந்திருக்கும் இளம் நடிகர் ஒருவர், தன்னுடைய பட விழாவின் போது இயக்குனர்கள் பற்றி பேசியது சர்ச்சையானதாம். இயக்குனர்கள் மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களே அவர் மீது கோபத்தில் இருக்கிறார்களாம்.
இதனால், தன்னுடைய இமேஜை மாற்ற தன்னுடைய நண்பர்களுக்கு போன் செய்து, எனக்கு ஆதரவாக பேசுங்கள், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யுங்கள் என்று கேட்டு வந்தாராம். யாரும் அவருக்காக குரல் கொடுக்கவில்லையாம். தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்க பலரிடம் ஆலோசனை கேட்டு போராடி வருகிறாராம்.
Next Story






