என் மலர்
சினிமா

கிசுகிசு
ஒரு காட்சிக்கு மட்டும் தனி சம்பளம் வாங்கிய நடிகை
முன்னணி நடிகையாக வலம் வருபவர், கவர்ச்சியாக நடிக்க அதிக சம்பளம் கேட்டு வாங்கி இருக்கிறாராம்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகை, தெலுங்கில் சம்பளம் அதிகமாக கொடுப்பதால், அங்கேயே கவனம் செலுத்தி வருகிறாராம். தற்போது நடிகை ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்கிறாராம்.
அந்த படத்தின் ஒரு காட்சியில், கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கேட்டாராம். முதலில் மறுப்பு தெரிவித்த நடிகை, அதன்பின் அதிக சம்பளம் கொடுத்தால் நடிப்பேன் என்று கூறினாராம். தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டு அந்த காட்சிக்கு மட்டும் நடிகைக்கு கூடுதல் சம்பளம் கொடுத்து இருக்கிறார்களாம்.
Next Story






