search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    நிகழ்ச்சியில் இருந்து நடிகையை நீக்கும் நிறுவனம்

    பிரபல நடிகை ஒருவர், தற்போது தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இருந்து தயாரிப்பு நிறுவனம் நீக்க இருக்கிறார்களாம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டாராம். அப்போது ஏறிய உடல் எடையை ரொம்ப கஷ்டப்பட்டு குறைத்து இருக்கிறாராம். உடல் எடை கூடியதால் பல பட வாய்ப்புகளை இழந்தாராம். இதனால், டி.வி. நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கினாராம்.

    அந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவிற்கு டிஆர்பி வரவில்லையாம். இதனால், அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம், நடிகையை நீக்க இருக்கிறாராம். அவருக்கு பதிலாக டி.வி. தொகுப்பாளினியை ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்களாம். இதனால் நடிகை மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம்.
    Next Story
    ×