என் மலர்
சினிமா

கிசுகிசு
பல கோடி சம்பளம் கேட்ட நடிகை
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பெரிய நம்பர் நடிகை, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறாராம். தற்போது நடிகை, பாலிவுட் படத்தில் கிங்கான நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம்.
இந்த படத்துக்கு நடிகை, தான் வாங்கும் ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு மேல் உயர்த்தி இருக்கிறாரம். ஏனென்றால் பெரிய பட்ஜெட், பெரிய நடிகர், பெரிய படம் என்று சொல்லி அதிக சம்பளம் கேட்டு இருக்கிறாராம். நடிகையின் சம்பளத்தை கேட்ட பாலிவுட் நடிகைகள், அவர் மீது பொறாமைப்பட்டு வருகிறார்களாம்.
Next Story






