search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    பிரபல இயக்குனரின் பேச்சைக் கேட்டு வாய்ப்பை இழந்த வாரிசு நடிகர்

    அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகர் ஒருவர் பிரபல இயக்குனரின் பேச்சைக் கேட்டு பட வாய்ப்பை இழந்து உள்ளாராம்.
    கோலிவுட்டில் பிரபலமான இயக்குனர் ஒருவர் தற்போது அக்கட தேசத்தை சேர்ந்த வாரிசு நடிகர் ஒருவருடன் கூட்டணி அமைத்துள்ளாராம். தனது படத்தில் நடிக்க வந்த பிறகு படப்பிடிப்பு முடியும்வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று வாரிசு நடிகருக்கு அந்த இயக்குனர் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

    இயக்குனரின் இந்த திடீர் கண்டிஷனால், புதிதாக தான் நடிக்கயிருந்த வேறொரு படத்தை அந்த வாரிசு நடிகர் தள்ளி வைப்பதாக அறிவித்துவிட்டாராம். நடிகரின் இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்த அந்த புதிய பட தயாரிப்பாளர், அவருக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.
    Next Story
    ×