search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    நடிகை விஷயத்தில் கறார் காட்டும் நடிகர்

    நடிகை தேர்வில் முன்னணி நடிகர் ஒருவர் சில நிபந்தனைகளை விதித்ததால் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.
    அக்கட தேசத்தை சேர்ந்த சீனியர் நடிகர் ஒருவர், வயதானாலும் ஹீரோவாக தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்கிறாராம். இதனால் அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள் அவருக்கு ஹீரோயினை தேடுவதில் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்களாம். ஏனெனில், அந்த நடிகரின் பெயரைக் கேட்டாலே இளசுகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அலறி ஓடுகிறார்களாம். 

    இது ஒருபுறம் இருக்க, தான் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் ஐந்தெழுத்து பெயர் கொண்ட முன்னணி நடிகை தான் நடிக்க வேண்டும் என்று கறாராக சொல்லிவிட்டாராம் அந்த நடிகர். இதனால் அந்த படத்தின் இயக்குனர் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்து வருகிறாராம். இதனாலேயே அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம். 
    Next Story
    ×