என் மலர்
சினிமா

கிசுகிசு
வயசானதால் சம்பளத்தை குறைத்த நடிகை
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான நடிகை ஒருவரின், அதிரடி மாற்றம் தயாரிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளதாம்.
தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வந்த ஒருவர், தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறாராம். அவருக்கு வயதாகி வருவதால் முன்னணி நடிகர்கள் அவருடன் நடிக்க மறுக்கிறார்களாம். இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்த அவர் அதிலும் தோல்வியை தழுவினாராம்.
தற்போது வேறு வழியின்றி இளம் நடிகர்களுடன் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம் அந்த நடிகை. மேலும் அவர் தனது சம்பளத்தையும் கணிசமாக குறைத்து இருக்கிறாராம். நடிகையின் இந்த அதிரடி மாற்றம் தயாரிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளதாம்.
Next Story






