என் மலர்
சினிமா

இப்படியே இருந்து விடுகிறேன், திருமணம் வேண்டாம் - நடிகர் விரக்தி
தமிழில் முன்னணி நடிகரான மூன்றெழுத்து நடிகர் தனக்கு திருமணமே வேண்டாம், நான் இப்படியே இருந்து விடுகிறேன் என்று விரக்தியுடன் கூறி வருகிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மூன்றெழுத்து நடிகர், அவருடன் நடிக்கும் நடிகைகள் அனைவருடனும் கிசுகிசுக்கப்படுவாராம். பிரியாணி கொடுத்தே நடிகைகளை கரெக்ட் பண்ணிவிடுவாராம் அந்த நடிகர்.
இப்படியே விட்டால் செல்லாது என்று, அவருக்கு திருமணம் செய்து வைக்க நாயகனின் வீட்டார் கடந்த சில வருடங்களாக மணப்பெண் வேட்டை நடத்தி வந்தார்களாம். ஜாதகங்கள் பொருந்தாததால், அவருடைய திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதாம். ஜாதகம் செட்டானால் அந்த பெண்ணை நடிகருக்கு பிடிக்கவில்லையாம்.
அதற்கு அப்புறமும் பெற்றோர் வற்புறுத்துகிறார்களாம். ஆனால் நடிகரோ, தனக்கு திருமணமே வேண்டாம் என்கிறாராம். தான் திருமணம் செய்துகொள்ளாமல் இப்படியே இருந்து விடுகிறேன், என்னை விட்டு விடுங்கள் என்று விரக்தியுடன் கூறுகிறாராம். நாயகன் திருமணம் செய்து கொண்டாலும் அவரைப் பற்றி வரும் கிசுகிசுக்கள் நிற்காது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். #Gossip
Next Story






