என் மலர்
சினிமா

முத்தக்காட்சிக்கு பயந்த முன்னணி நாயகிகள், துணிந்த வளரும் நடிகை
முத்தக்காட்சியில் நடிக்க முன்னணி நாயகிகள் பயந்த நிலையில், வளரும் நடிகை துணிந்து நடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். #Gossip
சமீபத்தில் திரைக்கு வந்த சென்னை படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். சென்னையில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த மக்களின் வாழ்க்கையை காட்டுவது போல அந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்களாம்.
படத்தில் ஆபாச காட்சிகளும், சர்ச்சை வசனங்களும் இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு கிளம்பியதாம். அத்துடன் ஒருசில வசனங்கள் அந்த பகுதி மக்களையும் வேதனையடைய செய்ததாம். இதையடுத்து சர்ச்சை காட்சிகளை படக்குழு நீக்கிவிட்டதாம்.
இந்த படத்தில் கதாநாயகியாக முதலில் பேசப்பட்டவர், சமத்தான நடிகையாம். படத்தில் முத்த காட்சியும், கெட்ட வார்த்தை வசனமும் இருக்கிறது என்று கேள்விப்பட்டதும், அவர் நடிக்க மறுத்து விட்டாராம். இதே காரணத்துக்காக தான், பால் நடிகையும் அந்த படத்தில் நடிக்க மறுத்தாராம்.
அதன் பிறகே குளிர்ச்சியான நடிகையை ஒப்பந்தம் செய்தார்களாம். குளிர்ச்சியான நடிகை துணிச்சலுடன் அப்படிப்பட்ட வசனங்களை பேசி நடித்து இருக்கிறாராம். நடிகையின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறதாம். அதே நேரத்தில் விமர்சனங்களும் வருகிறதாம். #Gossip
Next Story






