என் மலர்
சினிமா

வாய்ப்பு இல்லை... வாய் மட்டும் தான்... நடிகையின் கடுப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துவிட்ட அந்த நாயகிக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. #Gossip
கால்பந்தாட்டம் சம்பந்தப்பட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் இரண்டாவது நாயகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து ஆம்பள் ஆம்பள் என ஆட்டம் போட்ட அந்த நடிகைக்கு கைவசம் படம் ஏதும் இல்லையாம்.
ரிலீசுக்கு மட்டும் ஒரு படம் தயாராக இருக்கிறதாம். சமீபத்தில் தான் நாயகிக்கு திருமணம் நடந்ததாம். திருமணத்திற்கு பிறகும் சினிமாவை விட்டு பிரிய மனமில்லாத நாயகிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லையாம். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தாராம்.
மேலும் தனக்கு நெருக்கமான நடிகர்களின் பட வாய்ப்பையும் கேட்டு வந்த நடிகை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் வெறுப்புக் கனலை கக்குகிறாராம். இதனால் அவரும் வெறுப்பாகி, மற்றவர்களையும் வெறுப்புக்குள்ளாக்குகிறாராம். இது நடிகையின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துமே என்று கிசுகிசுக்கிறார்கள். #Gossip
Next Story






