என் மலர்
சினிமா

ஒருத்தர் கூட வரவில்லை - வருத்தத்தில் நடிகை
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பலருடன் நடித்த அந்த நடிகை திருமணத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில், அவரை தயாரிப்பாளர்கள் யாரும் தேடி வரவில்லை என்று வருத்தத்தில் இருக்கிறாராம். #Gossip
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் முதல் பிரபலமான நாயகர்கள் வரை பலருடன் நடித்த அந்த நடிகை கடைசியாக வம்பு நடிகருக்கு ஜோடியாக நடித்த ஏ படம் தோல்வியடைந்ததாம்.
அதன்பிறகு வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்த சாமி நடிகருக்கு ஜோடியாக நடித்திருக்கிறாராம். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறதாம். இதற்கிடையே நடிகை தான் காதலித்த வெளிநாட்டு விளையாட்டு வீரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டாராம். திருமணத்திற்கு பிறகு நடிகை திரும்பவும் நடிக்க வந்திருக்கிறார்.
தன்னை தேடி நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த அந்த நடிகைக்கோ ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஒரு பட அதிபர் கூட தன்னை தேடி வரவில்லை என்று மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கிறாராம் நடிகை. #Gossip
Next Story






