என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா (Cinema)
X
இந்த நடிகைக்கு இப்படி ஒரு ஆசையா!
Byமாலை மலர்2 Aug 2017 6:13 PM IST (Updated: 2 Aug 2017 6:13 PM IST)
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகையையும் இந்த ஆசை விட்டுவிக்கவில்லை.
பெண்கள் பயன்படுத்தும் மைக்கு வேறு பெயருடைய அந்த நடிகை, தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருவதால் தனது மார்க்கெட்டை சீராகவே வைத்திருக்கிறார். அவ்வப்போது ஒரு சில இந்தி படங்களிலும் நடித்து வரும் அந்த நடிகை தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகர்கள் இருவருடன் நடித்து வருகிறார். அந்த இரு படங்களும் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.
தெலுங்கில் பிரமாண்ட நடிகருடன் நடிகை நடித்திருக்கும் படமும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இருந்த போதிலும் தெலுங்கில் பிரபலமான நாக நடிகரை சமத்தான நடிகை திருமணம் செய்ய இருப்பதால், சமத்து நடிகையின் இடத்தையும் பிடிக்க, இந்த நடிகை தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அதுபோக இந்த நடிகைக்கு மற்றொரு ஆசையும் முளைத்திருக்கிறதாம். அதாவது, தமிழ் சினிமாவில் வயசானாலும் ஸ்டைலும், அழகும் குறையாத சூப்பர் நடிகருடன் நடிக்க வேண்டும் என்பது தான் அந்த நடிகையின் நீண்ட நாள் ஆசையாம். அதற்காக நடிகை முயற்சியும் செய்து வருகிறாராம். பொதுவாகவே எல்லா நடிகைகளுக்குமே இந்த ஆசை இருக்கும். இருந்தாலும் இந்த நடிகையின் ஆசைக்கு பலன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story
×