என் மலர்tooltip icon

    சினிமா

    கடனுக்காக பெரிய நடிகர்களின் கால்ஷீட்டுக்கு தவம் கிடக்கும் இயக்குனர்
    X

    கடனுக்காக பெரிய நடிகர்களின் கால்ஷீட்டுக்கு தவம் கிடக்கும் இயக்குனர்

    கடன் வாங்கி படம் தயாரித்து நஷ்டம் ஏற்பட்டதால், அந்த நஷ்டத்தை ஈடுகட்ட பெரிய நடிகர்களின் கால்ஷீட்டுக்காக இயக்குனர் ஒருவர் தவமாய் கிடக்கிறாராம்.
    தல, தளபதி நடிகரை வைத்து ஹிட் படங்களை கொடுத்த அஆ இயக்குனருக்கு நடிகர் ஆசை தலைதூக்கியதன் விளைவு, அவர் நடித்த எந்த படங்களும் சரிவர ஓடவில்லை. இதனால், அவரை நடிக்க வைக்க பலரும் தயங்கினார். இதனால், மறுபடியும் இயக்கம் பக்கமே திரும்பிவிடலாம் என எண்ணியிருந்தவருக்கு கடைசியாக இவர் இயக்கி நடித்த படமும் சரியாக ஓடவில்லை. இந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்தால், அவருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

    தனது நஷ்டத்தை ஈடுகட்ட தற்போது தற்போது தல, தளபதி நடிகர்களின் கால்ஷீட்டுக்காக தவமாய் கிடக்கிறாராம். இவர்களில் யாராவது ஒருவர் தனக்கு கால்ஷீட் கொடுத்தால் வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்துவிட முடியும் என நம்புகிறாராம். இதனால், அவர்களின் கால்ஷீட் எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். தல, தளபதிகளின் கடைக்கண் பார்வை இயக்குனர் பக்கம் திரும்புமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 
    Next Story
    ×