என் மலர்tooltip icon

    சினிமா

    ஓடாத படத்தை ஓட வைக்க முயற்சிக்கும் யதார்த்த நடிகர்!
    X

    ஓடாத படத்தை ஓட வைக்க முயற்சிக்கும் யதார்த்த நடிகர்!

    யதார்த்தமான நடிகராக சினிமாவில் வலம்வருபவர் இயக்கிய புதிய படத்தை விற்க புதிய வழியில் யோசித்து, அதில் தோற்றுப்போய் தற்போது அந்த படத்தை ஓட வைக்க முயற்சிகள் பல எடுத்து வருகிறாராம்.
    இயக்குனராக இருந்து கையெழுத்து படம் மூலம் தனது தலையெழுத்தை மாற்றிக்கொண்டு யதார்த்த நடிகர் என்று பெயர் பெற்ற மூன்றெழுத்து இயக்குனர், நீண்ட காலமாக படம் இயக்காமல் இருந்தார். புதிய வழியில் பணத்தை சம்பாதிக்கலாம் என்று நினைத்து புதிய படத்தை இயக்கி அதை, சி.டியில் போட்டு வீடுவீடாக சென்று விற்றார். இந்த படத்தை காசு கொடுத்து வாங்கி சி.டி.யில் பார்க்க யாரும் விரும்பாததால் இயக்குனர் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் சூடுபிடிக்க வில்லையாம்.

    இதனால் அடுத்த கட்டமாக இப்படத்தை திரையில் வெளியிட முடிவு செய்துள்ளாராம் இயக்குனர். ஆனால், தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை திரையிட சம்மதிக்கவில்லையாம். பல பேரை உதவிக்கு அழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர், ஒரு வழியாக குறைந்த தியேட்டரில் படத்தை திரையிட அனுமதித்திருக்கிறார்களாம். சி.டியில் ஓடாத படம் திரையில் நன்றாக ஓடுமா என்பதை பொருத்திருந்தான் பார்க்கனும் என்று ஊருக்குள்ள பேசிக்கிறாங்களாம்.
    Next Story
    ×