என் மலர்
சினிமா செய்திகள்

குபேரா மாதிரி படத்தை நீங்கள் இதுவரை கண்டிருக்க முடியாது - சேகர் கம்முலா
- சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
- திரைப்படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.
குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில் நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குபேரா டிரைலரை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சேகர் கம்முலா " நான் இதை கர்வத்துடன் சொல்லவில்லை. இம்மாதிரியான திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். இது ஒரு புதுவகையான சினிமா. மிகவும் புதிதாக அமைத்த கதைக்களம். இப்படத்தில் காதல், எமோஷன், திரில்லர் என அனைத்தும் இருக்கிறது. இப்படத்தை எந்த நாட்டினர் பார்த்தாலும் அவர்களால் இப்படத்தை கனெக்ட் செய்ய முடியும். இது ஒரு தரமான திரைப்படமாக இருக்கும்" என கூறியுள்ளார்.






