என் மலர்
சினிமா செய்திகள்

`யோகி பாபு நடிகனா இருக்கவே தகுதியில்ல' - கடுமையாக பேசிய தயாரிப்பாளர்
- யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர், சாந்தினி தமிழரசன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் 'கஜானா'.
- இந்த படத்தில் அழிந்துப்போன ஆதி உயிரினமான யாழி அனிமேஷன் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர், சாந்தினி தமிழரசன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் 'கஜானா'. மேலும் இப்படத்தில்வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஃபோர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். கோபி துரைசாமி, வினோத் ஜே.பி ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் அழிந்துப்போன ஆதி உயிரினமான யாழி அனிமேஷன் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட நாக ரத்தினம் அடங்கிய பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயத்தையும் அந்த கஜனாவை காப்பாற்றும் பேய்களின் அட்டகாசங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் காமெடியோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது அதில் தயாரிப்பாளர் யோகி பாபுவை சாடி பேசியுள்ளார் அதில் அவர் " கஜானா திரைப்படத்தின் இயக்குநர் சாம்ஸ் கண்டிப்பாக ரிலீசுக்கு பிறகு பெரிய இயக்குநராக வருவது நிச்சயம். இன்று இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பஞ்சமாக இருக்கிறார்கள். பட ப்ரோமோஷன்களுக்கு நடிகர்கள் கண்டிப்பாக வர வேண்டும், யோகி பாபு இன்று வரவில்லை, 7 லட்ச ரூபாய் கொடுத்து இருந்தால் இன்று வந்திருப்பார். இது கேவலமான விஷயம். ஒரு நடிகனுக்கு அவர் நடிக்கும் திரைப்படம் ஒரு குழந்தைப் போல். அதை வளர்க்க முடியவில்லை என்றால் அவர் நடிப்பதற்கு தகுதியில்லாதவன்" என கடுமையாக பேசியுள்ளார்.