என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கண்ணப்பா ஹார்ட் டிரைவ் திருட்டிற்கு என் சகோதரர் மனோஜ் காரணம் - விஷ்ணு பகீரங்க குற்றச்சாட்டு
    X

    கண்ணப்பா ஹார்ட் டிரைவ் திருட்டிற்கு என் சகோதரர் மனோஜ் காரணம் - விஷ்ணு பகீரங்க குற்றச்சாட்டு

    • முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது.
    • திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது

    முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது , சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

    திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கியமான கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிரைவ் கடந்த வாரம் திருடப்பட்டது. இதுக்குறித்து படக்குழு காவல் நிலையத்தில் புக்கரளித்தனர். சமீபத்தில் சென்னையில் கண்ணப்பா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    அப்போது படத்தின் நாயகனான விஷ்ணு மஞ்சு இந்த ஹார்ட் டிரைவ் திருட்டிற்கு தன் சகோதரர் மஞ்சு மனோஜ் தான் காரணம் என தெரிவித்தார். இச்செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    `ஹார்ட் டிரைவை திருடிய ரகு மற்றும் சித்ரா நபர்கள் மஞ்சு மனோஜ்-ற்கு வேலைப்பார்ப்பவர்கள். இதை யார் சொல்லி அவர்கள் திருடினார்கள் என தெரியவில்லை. படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனால் மக்கள் யாரும் அந்த வீடியோவை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

    மேலும் மஞ்சு மனோஜ் நடிப்பில் தற்பொழுது பைரவம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×