என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண பத்திரிகை?..  இணையத்தில் வைரல்
    X

    விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண பத்திரிகை?.. இணையத்தில் வைரல்

    எங்களின் இந்தப் புதிய பயணத்திற்கு உங்கள் ஆசி வேண்டும்.

    தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில் இருவரின் திருமண பத்திரிகை புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மை தெரியாவிட்டாலும், பலரும் இதை வைரல் செய்து வருகின்றனர்.

    அந்தப் பத்திரிகையின்படி, இவர்களது திருமணம் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    "எங்கள் குடும்பத்தினரின் ஆசியுடன் பிப்ரவரி 26 அன்று ஒரு சிறிய விழாவில் ராஷ்மிகாவும் நானும் இணைகிறோம். எங்களின் இந்தப் புதிய பயணத்திற்கு உங்கள் ஆசி வேண்டும்" என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

    குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் எளிமையாக நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து மார்ச் 4-ஆம் தேதி ஐதராபாத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×