என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    VA 26 - விஜய் ஆண்டனியின் அடுத்த பட அப்டேட்
    X

    VA 26 - விஜய் ஆண்டனியின் அடுத்த பட அப்டேட்

    • மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `ககன மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .
    • விஜய் ஆண்டனி அவரது 26- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்கும் `ககன மார்கன்' படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார் .

    அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை , தெகிடி, முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ஏ1, மாயவன் போன்ற திரைப்படங்களை எடிட் செய்தவர் படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

    இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி அவரது 26- வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜென்டில்வுமன் திரைப்படத்தை இயக்கிய ஜோஷ்வா சேதுராமன் இப்படத்தை இயக்கவுள்ளார். படத்தின் டைட்டில் அறிவிப்பை வரும் 19 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தையும் விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×